என் சூரியனே...!
சுருண்டு கிடந்த
என்னை
சூரியகாந்தி ஆக்கினாய்...!
அதெப்படி...?
உன்னால் மட்டும் முடிகிறது...?
உன் கண்கள் கவிபாட...
கால்கள் ஜதி சேர்க்க...
என் மன்தில்
நொடிக்கொரு...
நடனத்தை அரங்கேற்றம்
செய்கிறாய்...
என் இனிய பூகம்பமே...
என் மனதில்
நீ ஏற்படுத்தும்
தாக்கத்தை
எந்த ரிக்டர் ஸ்கேலால் அளப்பது?
பிரம்மன் உன்னை
படைப்பதற்கு முன்...
ரவிவர்மாவிடம்
கலை பயின்றானோ?
நதியின் சங்கமம்
கடலிலே...
அழகின் சங்கமம்
உன்னிலே...!!!
பி. கு. : கவிதைய யார நினைச்சுட்டு எழுதின? எதுக்கா எழுதின? இப்படி எல்லாம் எசகு பிசகா கேள்வி கேக்க கூடாது சொல்லிடேன்.. படிச்சோமா, ரசிச்சோமா (நல்லா இருந்தா) கமெண்ட்ட போட்டோமானு இருக்கனும்...
btw, இது ஓரு கற்பனை கவிதையே... அட நம்புங்க...
